உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை) Part – 2..,

0
உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை)
உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை)

                                                                       Story Writer

                                                                               Sudha Rajendiran

 

அந்த அழகான கல்லூரியில் அவர்களின் நட்பும் அழகாய் மலர்ந்தது. ராஜிக்கும் திவ்யாவிற்கும் எல்லா விஷயத்திலும் ஒத்து போனது. நாட்கள் சென்று கொண்டே இருக்க நாள் ஒன்றுக்கு புதிதாக மாணவர்கள் சேர்ந்துகொண்டு தான் இருந்தனர்.

ராஜியும், திவ்யாவும் வழக்கம் போல சிரித்து அரட்டை அடித்து கொண்டு நடந்து போக திடீரெனெ குரல் கேட்டு திரும்பினர்.

ஓய்ய்ய்ய்ய் ரெண்டு பெரும் இங்க வாங்க…..

திவ்யா யாருடி இது??

அதான் டி எனக்கும் தெரியல…..

கூப்பிடுறோம்ல வாங்க ரெண்டு பேரும்….

ஃபிரெஷரா ரெண்டு பெரும்….

ஆமா….

சீனியர பார்த்தா வணக்கம் வைக்கிறது இல்லையா??

ராஜி இவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது.., இரு பேசுவோம்..,

ராகிங் பண்றதெல்லாம் தப்பு தானே?? காலேஜ் ஆரம்பிக்கும்போது சொல்லி தான் விட்டாங்க..

ஓஹோ… எனக்கு ரொம்ப பயமா இருக்கு…. ஹாஹாஹா.., என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா.., நான் யாரு தெரியுமா??

ராஜிக்கும் திவ்யாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?? என்று முழித்துக்கொண்டிருக்க.. என்ட்ரி கொடுக்கிறான் நம்ம வெற்றி மாறன்.

நம்ம திவ்யா ராஜி கிளாஸ் தான். கிளாஸ்ல 60 பாய்ஸ் இருக்குறதால அவங்களுக்கு அடையாளம் தெரியல…, 

ஏதும் பிரச்சனையா ராஜி….. முறைத்து கொண்டு வருகிறான் வெற்றி.. அவளும் திவ்யாவும் யார் என்று முழிக்கின்றனர்.

இங்க பாருங்க.. இதான் லாஸ்ட். ஜூனியர் பையன் கையால அடிவாங்குனோம்னு அசிங்கம் வேணாம்னு பாக்குறேன்… சீனியர் எதுவும் பேசாமல் அதிர்ந்து நிற்கிறார்.

கேன்டீனில் அவன் யார் என்று அறிந்து கொள்ளும் ஒரு ஆவலில் நின்று கொண்டுள்ளனர்.

திவ்யா அது யாரா இருக்கும்டி??

எனக்கு மட்டும் தெரியுமா என்ன?? உன் கூட தானே நானும் நின்னேன்.

வெற்றிமாறன் இவர்களை தேடி உள்ளே வருகிறான்.

இருவரும் ஒரு டேபிளில் அமர்ந்திருக்க அங்கு செல்கிறான்…

ஹாய்..

ராஜியும், திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள…

ரெண்டு பேரும் ரொம்ப யோசிக்காதிங்க… நான் வெற்றி… வெற்றி மாறன்.. நான் உங்க கிளாஸ் தான்.

இரண்டு பேருக்கு பெரிய ஷாக்.

நாங்க உங்களை பார்த்ததே இல்லை… அத்தனை பாய்ஸ்க்கு மத்தியில உங்களை அடையாளம் தெரியல சாரி.

அதனால ஒன்னும் இல்ல.. இப்போ பயம் இல்ல தானே உங்களுக்கு…

ரொம்ப தேங்க்ஸ்.. சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க…..,

பரவாயில்லை… உங்களுக்கு ஏதும் Problem இல்லனா ஃபிரண்ட்டாகிக்கலாமா??

திவ்யாவும், ராஜியும் சிரித்தே விட்டனர். எங்க கூட ஃபிரண்ட் ஆகணும்னா சில ரூல்ஸ் இருக்கு என்று சொல்ல..

வெற்றிமாறன் முழிக்க ஆரம்பித்து விட்டான்..

பயப்படாதீங்க… சின்ன விஷயம் தான்.., நாங்க எப்போ கூப்பிட்டாலும் ஊர் சுத்த வரணும்… எந்த நேரத்துல சாப்பிட கூப்பிட்டாலும் வரணும்.., இன்னொரு முக்கியமான விஷயம் இங்க கேங் குள்ள வந்துட்டா வந்தது தான்.. வெளிய போக சான்ஸ் இல்ல… டீலா??

வெற்றி மாறனுக்கு சிரிப்பு தான் வந்தது. அன்றையிலிருந்து மூவரின் பயணமும் ஆரம்பிக்கிறது. வெற்றியும், திவ்யா, ராஜியின் அரணாகவே மாறி விட்டான்.

பார்த்து பழகியே 2 நாளிலேயே காதலை சொல்லும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி மாறன் திவ்யா, ராஜிக்கு வித்தியாசமாவே தெரிந்தான்.

நட்பு தொடரும்.

உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை) Part – 1..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here