Tuesday, May 21, 2024

முன்னாள் U19 கிரிக்கெட் வீரர் சுரேஷ் குமார் தற்கொலை – கவலையில் ரசிகர்கள்!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் U19 கிரிக்கெட் வீரர் சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் U19 கிரிக்கெட் வீரர்:

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். அவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. இந்தியாவின் U19 கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக அவர் சேர்ந்தார். கடந்த 1990 ஆம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான U19 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடியவர். முதன்முதலாக கேரளா மாநிலத்தில் இருந்து சென்றவர் இவர் தான். அப்போதைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இந்த அணிக்கு தலைமை தாங்கினார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பின், பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று தனக்கென தனி இடத்தினை பிடித்தார். அவரது கிரிக்கெட் வாழ்வில் மைல்கல் என்று சொன்னால் 1994 -1995 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு எதிராக நடந்த ரஞ்சி போட்டி தான். அந்த போட்டியில் 164 ரன்கள் எடுத்தார். அதே போல் அதிரடியாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு அடுத்த ஆண்டு 1995 – 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தூக்கிட்டு தற்கொலை:

இப்படி தனக்கென தனி இடத்தை பிடித்த சுரேஷ் குமார் தனது சொந்த ஊரான ஆலப்புழாவில் உள்ள வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் சடலமாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டார்.

ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

suresh kumar
suresh kumar

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தற்போது தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -