ட்விட்டர் தளத்தில் புதிய அப்டேட் – இந்தியாவில் தொடங்கும் சோதனை!!

0

தற்போது சமூலவலைத்தள செயலியான ட்விட்டர் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இதனை தற்போது இந்தியாவில் சோதனைப்படுத்தியும் வருகிறது.

ட்விட்டர்:

சமூகவலைத்தள நிறுவனங்களில் மிக முக்கியமாக ஒன்றாக இருப்பது தான் ட்விட்டர். இதனை அரசியல் பிரமுகர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதில் தான் பல கருத்து போர்களும் நடந்து வரும். இந்த நிறுவனம் பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை பயனாளர்களுக்கு வழங்கி வரும். மேலும் அவை அனைத்தும் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இனி டைரக்ட் மெஸேஜில் இனி வாய்ஸ் செய்தி அனுப்பலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதனை தற்போது இந்தியாவில் சோதனை நடத்தியும் வருகிறது. இந்த அப்டேட் பயனாளர்கள் அனைவருக்கும் மிக உதவிகரமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். இந்தியாவை போல் இந்த வசதியை பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது ட்விட்டர் நிறுவனம்.

ஐபிஎல் தொடர் – பெயரை மாற்றிய பஞ்சாப் அணி!!

தற்போது இந்த தகவலை ட்விட்டர் இந்தியாவின் செயல் இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விடியோவை ட்விட்டர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அப்டேட் ரசிகர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here