குக் வித் கோமாளி செட்டில் அஸ்வின், ஷிவாங்கி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

0

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி விஜய் டிவி ஷெட்டில் நடந்துகொண்டிருக்கும் போது ஷிவாங்கி செய்த செயலால், அஷ்வின் ஷிவாங்கியை ‘கேடி ஃபெல்லோ’ என திட்டியுள்ளார். இந்த காணொளியை ஷிவாங்கி தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் சமீபகாலமாக மக்கள் அதிகமாக பார்க்கக்கூடிய, ரசிக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இதற்காகவே வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை எப்போது வரும் என எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். கடந்த ஆண்டு வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதலாவது சீசனின் வெற்றிக்கு பிறகு மீண்டுமாக இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்ற சீசனில் கோமாளியாக வந்த புகழ் மட்டும் தான் நடிகை ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்திருந்தார். இந்த சீசனில் ஒரு படி மேலே போய் தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, சுனிதா என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை அவர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் புகழின் தங்கை என்று ஷிவாங்கி செய்யும் லூட்டிகள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு ஜோடியாக ஷிவாங்கி தான் வரவேண்டும் என ஷிவாங்கியை விட அவரது ரசிகர்கள் தான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஐபிஎல் தொடர் – பெயரை மாற்றிய பஞ்சாப் அணி!!

ஷிவாங்கி அஷ்வினுக்காக பாட்டுப்பாடுவது, சுனிதாவிடம் சண்டை போடுவது என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியிலேயே இவ்வளவு கலவரம் என்றால், ‘குக் வித் கோமாளி’ ஷெட்டில் நடக்கும் அட்ராசிட்டிகள் என்றால் சொல்லவா வேண்டும், அது இன்னும் ஜோராக நடந்து வருகிறது.

சமீபத்தில் குக் வித் கோமாளி ஷெட்டில் அஷ்வின் ஏதோ ஒரு பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருக்கிறார். அதை அஷ்வினுக்கு தெரியாமல் ஷிவாங்கி வீடியோ எடுக்க, அதைப் பார்த்த அஷ்வின் ‘கேடி ஃபெல்லோ’ என செல்லமாக திட்டியுள்ளார். இந்த காணொளியை ஷிவாங்கி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட அதை குக் வித் கோமாளி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here