உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா – டிரம்ப் அதிரடி.!

0

சீனாவில் உஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக வருகிறது. நாளுக்கு நாளுக்கு இதனால் பலி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயால் உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போயி உள்ளது. இதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா

கடந்த ஆண்டு டிசம்பர மாதம் முதன்முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹானில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா நோய்த்தொற்றுக்கும் அந்த நாட்டில் 3,300 பேர் உயிரிழந்தனர். இந்த நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி சுமார் 19 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 1 லட்சத்து 26 ஆயிரத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

China's move to lockdown Wuhan delayed spread of coronavirus ...

நோய்த்தொற்றுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 5 லட்சத்து 94 ஆயிரத்து 207 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா

கொரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை சீனா அரசு மறைத்து விட்டதாகவும், நோய்த்தொற்றின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகவும், அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி வந்த டிரம்ப், அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை உடனடியாக நிறுத்துமாறு செவ்வாய்க்கிழமை தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Donald Trump Takes America on a Journey to the Dark Side - NBC News

இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது. “கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைந்தது குறித்து விரிவான மதிப்பீடு செய்ய தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

How to Reform the Ailing World Health Organization | Council on ...

அந்த மதிப்பீடுப விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்தி வைக்குமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளேன்.” இவ்வாறு டிரம்ப் கூறினார். உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கம் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா ஒரு நோய்த்தொற்றாக மாற வழிவகுத்த சீனாவுடனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்பட்டதாக உலகளவில் விமர்சிக்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here