Saturday, May 4, 2024

மக்கள் மனநல ஆலோசனை – டோல் ஃப்ரீ ஹெல்ப்லைன் “கிரண்” அறிமுகம்!!

Must Read

கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில் மத்திய சமூக முன்னேற்றம் மற்றும் நீதி துறை அமைச்சகத்தால் கட்டணமில்லா ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அறிமுகம்:

கொரோனா நோய் பரவல் காரணமாக பலரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மனநல ஆலோசனை வழங்குவதற்காக கட்டணமில்லா ஹெல்ப்லைன் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சமூக முன்னேற்றம் மற்றும் நீதி துறையின் மத்திய அமைச்சர் தவர்சந்த் கெஹ்லாட் 24 × 7 கட்டணமில்லா மனநல மறுவாழ்வுக்கான ஹெல்ப்லைன் “கிரண்”ஐ (1800-500-0019) அறிமுகப்படுத்தினார். “கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து மக்களை காப்பதே இதன் நோக்கம்” என்று சமூக முன்னேற்றம் மற்றும் நீதி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் நோக்கம்:

கோவிட் -19 தொற்றுநோயால் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்ற துறை (DEPwD) உருவாக்கிய ஹெல்ப்லைன் ஆலோசனை வழங்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆய்வில் தகவல்:

இந்த தொலைத்தொடர்ப்பு எண் ஆன்லைன் வெளியீட்டின் போது பேசிய இணைச் செயலாளர் பிரபோத் சேத், “ 2015-2016 ஆம் ஆண்டில் நிம்ஹான்ஸ் கணக்கெடுப்பில் 10.6% பெரியவர்கள் மற்றும் 7.3% இளம் பருவத்தினர் மனநோயை எதிர்கொண்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை!!

mental helth service through call
mental helth service through call

ஹெல்ப்லைன் கிரான் அரசு தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்  (BSNL) தொலைதொடர்பு உள்கட்டமைப்பை வழங்கியுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, உருது, அசாமி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்பவர்கள் மனநல  நிபுணர்களுடன் இணைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க நிபுணர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -