ரெஸ்டாரண்ட் ஸ்டைல் Kofta ரெசிபி – வீட்டிலே செஞ்சு அசத்துங்க!!

0
Kofta
Kofta

இப்பொழுது உள்ள குழந்தைகள் சத்தான உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. சுவையாக இருந்தால் மட்டுமே விரும்பி உண்ணுகின்றனர். இந்த பதிவில் குழந்தைகள் விரும்பும் விதமாக சத்தான Kofta எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

kofta-recipe
kofta-recipe
  • கடலைப்பருப்பு – 10 கிராம்
  • தேங்காய் – அரை மூடி
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி – சிறிது
  • பூண்டு – 4 பல்
  • பச்சைமிளகாய் – 3
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • கசகசா – 1 தேக்கரண்டி ( அரைத்துக்கொள்ள வேண்டும்)
  • முந்திரிப்பருப்பு – 20 கிராம்

செய்முறை:

முதலில் கடலை பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். அதன்பின் தேங்காய், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து ஊறவைத்துள்ள கடலை பருப்பையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நாம் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kofta
kofta

கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி அதனை ஆற வைத்து உருண்டையாக பிடித்து எண்ணெய்யில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு சேர்த்து அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

kofta
kofta

அரைத்து வைத்த கசகசாவை சேர்த்து கிளறவும். கொதி வந்ததும், அரைத்து வைத்த முந்திரியை சேர்க்கவும். அதன்பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்க்கவும். அதன்பின் தயிரை சேர்க்கவும். பிறகு நன்கு கொதி வந்ததும் சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் அதில் உருண்டைகளை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கினால் kofta தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here