தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
online class

தமிழகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்தததை தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மொபைல் அல்லது கணினி இணைய வசதியுடன் தேவை. இதனை பயன்படுத்தும் போது மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு மற்றும் இடையிடையே ஆபாச இணையதளங்களின் விளம்பரங்கள் வருகிறது. எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Chennai_High_Court
Chennai_High_Court

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என தீர்ப்பளித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகள், நேரத்தை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தினர். அதுமட்டுமின்றி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றதாக பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here