கங்கனா ரனாவத் வீட்டின் முன் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் – தீவிரமாகும் மோதல் !!

0
gangana ranaut
gangana ranaut

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சுஷாந்த் மரணத்திற்கு பிறகு பாலிவுட் குறித்து பல உண்மைகளை வெளியிட்டார், மேலும் மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் விமர்சித்தார். இதனால் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவுத்துக்கும், கங்கனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையில் கங்கனா வீட்டிற்கு முன் சட்ட விரோதமாக வீடு கட்டப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கங்கனா ரனாவத்:

ஹிந்தி திரையுலக நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து கங்கனா ரனாவத் போதை பொருள் கும்பல், திரையுலக மாஃபியா போன்றவற்றை விமர்சித்து விடீயோக்களை வெளியிட்டார். மேலும் மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் விமர்சித்தார். இதனால் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரவுத்திற்கும் கங்கனாவிற்கும் ட்விட்டரில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதனால் கங்கனா மன்னிப்பு கேட்டல் மட்டுமே மும்பைக்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளார். அத்தனையும் தாண்டி கங்கனா மும்பைக்கு வந்தே தீருவேன் என்று பதிலடி கொடுத்தார்.

gangana
gangana

இந்த பிரச்சனைகளால் கங்கனாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து மும்பையில் அவரது வீட்டை சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள வீடு என்று இடிக்க முயன்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து மும்பை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, கங்கனா ரனாவத் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த நோட்டீஸ் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gangana
gangana

அந்த நோட்டீஸில்,  அந்த வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கழிவறை அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. மாடிப்படி அருகே புதிதாக கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா பகுதியில் முன் அனுமதியுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதை அரசு அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here