இந்தியாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பப்ஜி’ – சீன நிறுவன உரிமம் பறிப்பு!!

0
PUBG
PUBG

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக பப்ஜி (PUBG) உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவினுள் மீண்டும் நுழைய PUBG கார்ப்பரேஷன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பப்ஜி ரீஎன்ட்ரி:

லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து சீன தயாரிப்புகளுக்கு நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சீன பொருட்கள் ஏற்றுமதி மற்றும் அரசு ஒப்பந்தங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமின்றி சீனா மீது ‘வர்த்தகப் போரினை’ இந்திய நடத்தி வருகிறது. அதாவது டிக்டாக், ஷேர்சாட், பப்ஜி உட்பட 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீன பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. இதன் விளைவாக சீன நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை பல்வேறு செயலிகள் நிறுத்திக் கொண்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

PUBG-TPP
PUBG-TPP

இந்நிலையில் இந்திய இளைஞர்கள் பெரிதும் விரும்பும் விளையாட்டான PUBG ரீஎன்ட்ரி கொடுக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் டென்சென்ட் எனும் சீன நிறுவனம் PUBG உரிமத்தை வைத்திருந்தது. இதனை தற்போது PUBG கார்ப்பரேஷன் பறித்துள்ளது. மேலும் PUBG நிறுவனமே நேரடியாக இந்தியாவில் கேமை வெளியிட திட்டமிட்டு உள்ளது. தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட PUBG கார்ப்பரேஷன் இந்திய பயனர்களின் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்து உள்ளது.

“ப்ரி பயர்” விளையாட்டால் சிறுமிக்கு நடந்த விபரீதம் – சிறுவன் வெறிச்செயல்!!

இதன் மூலம் இன்னும் சில நாட்களில் PUBG மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. PUBG இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நிறுவனத்திற்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here