சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு – மீண்டும் உச்சத்தில் தங்கத்தின் விலை!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதும் அதன் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இன்றைய விலை:

கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23க்கு கீழே சரிந்துள்ளது. கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்துறையில் ஏற்பட்ட சரிவு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது. பிற தொழில்துறைகள் சரிவை சந்தித்தாலும் தங்கத்தின் மதிப்பு துளியும் குறையாத காரணத்தால், அதன் மீதான முதலீடுகள் கிடுகிடுவென அதிகரித்தது. இதன் விளைவாக அதன் விலையும் விண்ணைத் தொட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gst for old gold ornaments

ஊரடங்கு காலத்தில் சிறிய பட்ஜெட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க திட்டமிட்டவர்களும் தங்கத்தின் விலையை கேட்டு ஆடிப்போகினர். கடந்த மாதம் சவரன் 43 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையான தங்கம், இந்த மாதம் முதலே சரியத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 19 ரூபாய் உயர்ந்து ரூ. 4,909 க்கும், ஒரு சவரன் 152 ரூபாய் அதிகரித்து ரூ. 39,272 க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 70 ஆகவும், ஒரு கிலோ 70,000 ரூபாயாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here