கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகம் இடிக்கும் பணி தொடக்கம் – மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!!

0
kangana ranuat
kangana ranuat

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான மும்பை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருத்த நிலையில், இன்று அதனை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. கங்கனா மும்பைக்கு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் கட்டிடம் இடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கங்கனா ரனாவத்:

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திரையுலக மாஃபியா மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் அதிரடி கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் மும்பையை ‘மினி பாகிஸ்தான்’ எனவும் விமர்சித்தார். இதனால் சிவ சேனா கட்சியின் சஞ்சய் ராவத், கங்கனா மும்பைக்கு வர தகுதியில்லை எனவும் மீறி வந்தால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்த சவாலை ஏற்ற கங்கனா இன்று மும்பை வந்து கொண்டிருக்கிறார். அவரை வரவேற்கும் வகையில் #Welcome Mumbai Kangana எனும் ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவரது உயிருக்கு அச்சறுத்தல் நிலவுவது காரணமாக ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதற்கிடையில் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று போஸ்டர் ஒட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஜேசிபி உட்பட பல உபகரணங்களுடன் கங்கனா அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் அதனை இடிக்கத் தொடங்கி உள்ளனர். இது ஒரு “ஜனநாயக படுகொலை” என கங்கனா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். மேலும் இதனால் தான் மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here