தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

0
Rain
Rain

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை புயல் உருவாகி மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும் என்பதால் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மணிக்கு 45 – 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இப்பகுதிக்கு ஜூன் 4 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவ்வப்போது 70 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 37 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here