Saturday, May 4, 2024

இன்றைய தலைப்பு செய்திகள் – சில துளிகள்!!

Must Read

தேசிய செய்திகள்:
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மறைந்த பாஜக தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக100 நாணயத்தை இன்று வெளியிட்டு உள்ளார். விஜய ராஜே சிந்தியா ‘குவாலியரின் ராஜமாதா’ என்று பிரபலமாக அறியப்படுகிறார். விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டது.
  • மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் தேர்வினை தவறவிட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் அவர் சந்தித்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
  • கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்விற்கான முடிவுகள் வரும் அக்டோபர் 16 ஆம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தேர்வினை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் 15 லட்சம் மாணவமாணவிகள் எழுதினர்.
மாநில செய்திகள்:
  • பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட இறுதிப்பருவ செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வினை முறையாக எழுதாதவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
  • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆக இருந்த நடிகை குஷ்பூ, இன்று டெல்லியில் பாஜக., தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி அவர்களை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பிரதமர் மோடி அவர்கள், நாட்டை சரியான பாதைக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
வணிக செய்திகள்:
  • இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 அதிகரித்து ரூ.4,887 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48 உயர்ந்து ரூ. 39,096 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.66.80 ஆக உள்ளது.
  • பொருளாதாரத்தில் தேவையை அதிகரிப்பதற்காக நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டி இல்லாத பண்டிகை கால முன்பணமாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார்.
வானிலை அப்டேட்:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
  • சானிடைசர் மற்றும் சோப்பு போன்றவை கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை அளவு அதிகமாக பயன்படுத்தினால், நமது நோய் திறன் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சரியாக விளையாடாததால் அவரது 5 வயது மகளுக்கு சமூகவலைதளம் வாயிலாக பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது பள்ளி மாணவர் ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • உலகின் உயரிய விருதான “நோபல் பரிசுகள் 2020” ஒவ்வொரு துறைகளுக்கும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டிற்கான 5 துறைகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது பொருளாதாரத்திற்கான விருதுகள் இருவருக்கு விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன. பால்.ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட்.பி. வில்லசன் ஆகியோர் பெற உள்ளனர்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -