Saturday, April 27, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள் – தவறாம படிங்க!!

Must Read

தேசிய செய்திகள்:
  • நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 8வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு (அன்லாக் 5.0) பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • சாலைகளில் தணிக்கை என்ற பெயரில் நடக்கும் ஊழலை தடுக்க புதிய முறையாகவும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக இனி ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை சோதனையின் போது காட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டு மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அப்பெண்ணின் குடும்பத்தை சந்திக்க நடைபயணம் மேற்கொண்டார், அவரை தற்போது போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
  • ஹாத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் மரணம் அடைந்துள்ளார் என்றும் சிலர் சாதி பிரச்சனையை தூண்டுவதற்கு தான் சில விஷமிகள் இந்த விஷயத்தை திசை திருப்புகிறார்கள் என்று கூறியுள்ளார், உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார்.
  • 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் ஆளாகி கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து மேலும் 22வயது பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது நாட்டு மக்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாநில செய்திகள்:
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 உள்ளிட்ட 7 தேர்வுகளுக்கு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு தேர்வாணையம் அதிகாரி சுதன் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார். தேர்வு எழுதிய அனைவரும் முடிவினை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் முடிவினை தெரிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 2 (நாளை) நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தனியார் ஹோட்டல்களில் உள்ள பார்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
  • கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இன்ஜினியரிங் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர்.
வணிக செய்திகள்:
  • மாதத்தின் முதல் நாளான இன்று தங்க விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து சவரன் 38,600 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4,825 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி 63.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு லிட்டர் ரூ.76.10 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இன்று பங்கு வர்த்தகம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் 527.26 புள்ளிகள் உயர்ந்து 38,595.19 என்ற கணக்கை தொட்டுள்ளது. அதே போல் தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை 137.90 புள்ளிகள் உயர்ந்து 11,385.45ஐ தொட்டுள்ளது.
வானிலை செய்திகள்:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -