Tuesday, April 30, 2024

ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை – தமிழக அரசு முடிவு!!

Must Read

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தில் மக்கள் கைரேகை வைப்பதில் சிரமத்தை சந்தித்தால் தமிழக அரசு தற்போது பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு”

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அமல்படுத்தினார். இதன் மூலமாக இந்தியாவில் உள்ள எந்த மாநில ரேஷன் கடைகளிலும் மக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. மக்கள் தங்கள் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இந்த புதிய முறை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதற்காக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்படியாக இருக்க, பல ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் என சொல்லப்படும் கைரேகை இயந்திரம் சரியாக செயல்படவில்லை. இதனால் மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். சிலருக்கு கைரேகை பொருந்தவில்லை என்ற காரணத்தால் வீட்டில் இருக்கும் வேறு ஒரு நபரை அழைத்து வாருங்கள் என்று கடை விற்பனையாளர்கள் கூறியதால் மக்களுக்கு நேரம் வீணாவதுடன், மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இதனால் மக்கள் பொருட்களை பெற முடியாமலும் தவித்தனர்.

புதிய உத்தரவு:

இதனை தொடர்ந்து நேற்று அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தார். அதில் தெரிவிக்கப்பட்டதாவது “மக்களுக்கு கைரேகை பொருந்துவதில்லை சிரமம் உள்ளது என்ற காரணத்திற்காக அவர்களுக்கு பொருட்களை வழங்காமல் அனுப்ப கூடாது. பழைய முறையினை பின்பற்றி பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.”

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம் – விரைவில் தேர்வு??

“அப்படியும் இல்லையென்றால், அடுத்தகட்டமாக, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ஆதார் OTP முறை, இதில் ஏதேனும் ஒரு முறையினை பிரயோகப்படுத்தி பொருட்களை வழங்கலாம்” என்று தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு பள்ளிகளில் கைரேகை முறையினை பயன்படுத்தினால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மகளிர் உரிமைத்தொகை.., புதிய பயனர்கள் இந்த தேதியில் இணைப்பு.., விண்ணப்பங்கள் குறித்த அப்டேட்!!

தமிழகத்தில் இலலதரசிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. தேர்தல் காரணமாக புது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -