ஐபிஎல் 2020: ஹாட்ரிக் வெற்றி பெறுமா டெல்லி கேபிடல்ஸ்?? இன்று ராஜஸ்தான் உடன் மோதல்!!

0

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 23 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோத உள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. ஏற்கனவே தொடர்ச்சியாக 3 தோல்விகளை அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழைய இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐபிஎல் 2020:

டெல்லி, ராஜஸ்தான் என இரு அணிகளுக்கும் இந்த ஐபிஎல் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றன. பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி தோல்வி அடைந்தது. ஆனால் அதற்கடுத்து வெறிகொண்டு எழுந்த டெல்லி அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மறுபுறம், ஸ்டீவன் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷார்ஜாவுக்கு வெளியே துபாய், அபுதாபி மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெறவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி பிளேஆப் கனவை நினைத்துப் பார்க்க வேண்டுமானால் இப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

இரு அணிகள், இதுவரை:

இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 முறையும், டெல்லி அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), அங்கித் ராஜ்பூத், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தேவதியா, ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்க்கண்டே, மஹிபால் லோமர், ஓஷேன் தாமஸ், ரியான் பராக், யஸ்வி பராக் , அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, ஷாஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் கரண், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர்

டெல்லி கேபிடல்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், பிருத்வி ஷா, சிம்ரான் ஹெட்மியர், காகிசோ ரபாடா, அஜிங்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, ரிஷாப் பந்த், இஷாந்த் சர்மா, அக்சர் படேல், சந்தீப் லாமிச்சேன் , மோஹித் சர்மா, அன்ரிச் நார்ட்ஜே, அலெக்ஸ் கேரி, அவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here