Monday, April 29, 2024

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம் – விரைவில் தேர்வு??

Must Read

தமிழக அரசின் உத்தரவையடுத்து அரியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் மதிப்பெண் வழங்கப்பட்டு வந்த பணிகள், தற்போது அரசு அறிவித்த அரசாணை அகில இந்திய கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பானது என்று கூறப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் தங்களது பருவ தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு கல்லூரி மாணவர்களின் பருவ தேர்வுகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தமிழகத்தில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர். தமிழக அரசு அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்ச்சியினை அறிவித்தது. இந்த தேர்ச்சி அறிவிப்பு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டது. அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்தி இருந்தாலே அவர்கள் தேர்ச்சி என்று சொல்லப்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ கட்- ஆவுட்டிற்கு பால் அபிஷேகம் கூட செய்தனர். ஆனால், இந்த அறிவிப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு 2020 – உலக உணவு திட்டம் அமைப்பிற்கு அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில், தேர்வு எழுதாமல் தேர்ச்சி அறிவிப்பது அகில இந்திய கவுன்சிலின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு புறம்பானது என்று AICTE கூறியிருந்தது. இந்த வழக்கு இன்னும் தொடர்வதால் அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்த பின், அவர்களுக்கு தேர்வு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -