பிக் பாஸில் 17 வது போட்டியாளராக பங்கேற்கும் Vj அர்ச்சனா – ரசிகர்கள் உற்சாகம்!!

0
VJ-Archana-Bigg-Boss-Tamil-wild-card-contestant
VJ-Archana-Bigg-Boss-Tamil-wild-card-contestant

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் 2வது நாளே சண்டையும் கிளம்பியுள்ளது. தற்போது 16 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது 17வதாக Vj அர்ச்சனா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் 4

கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் நாளில் சந்தோசமாக இருந்தபோட்டியாளர்கள் இரண்டாவது நாளே சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

bigg boss season 4
bigg boss season 4

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அனிதா சம்பத் ஒன்னும் இல்லாத பிரச்னையை இழுத்து சுரேஷ் சக்ரவர்த்தியுடன் சண்டை போடுகிறார். தொடர்ந்து 3 நாட்களாக இந்த சண்டையை காட்டுவதால் மக்கள் பலரும் அனிதாவிற்கு எதிராக பேசி வருகின்றனர்.

bigg boss season 4
bigg boss season 4

மேலும் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சனம் நேற்றைய எபிசோடில் காரணமே இல்லாமல் கோபப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது வெளியான ப்ரோமோவில் கூட ரேகா – சனம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

bigg boss season 4
bigg boss season 4

ஒரு வேலை எலிமினேஷனில் இருக்கும் காரணத்தால் சிம்பதி கிரியேட் செய்கிறாரோ?? என்று பலரும் கமெண்டில் கூறு வருகின்றனர். மேலும் ரம்யா எலிமினேஷன் லிஸ்டில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கிங் ஆக உள்ளது.

archana
archana

இந்நிலையில் 17 வது ஆளாக ஜீ தமிழ் Vj அர்ச்சனாவை விஜய் டிவி களமிறக்கவுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏற்பட்ட சட்ட சிக்கலால் பிக் பாஸில் பங்கு பெற முடியாமல் போனது. ஏற்கனவே நிஷாவால் கலைகட்டியுள்ள பிக் பாஸ் தற்போது இவரும் கலந்துகொண்டால் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here