அமைதிக்கான நோபல் பரிசு 2020 – உலக உணவு திட்டம் அமைப்பிற்கு அறிவிப்பு!!

0

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக உணவு திட்டம்’ அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் ஏழை மக்களுக்காக 58 ஆண்டுகளுக்கு மேலாக உணவளித்து வரும் சேவைக்காக இந்த அமைப்பு இம்முறை தேர்வாகி உள்ளதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு:

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகரில் இருந்து ஒவ்வொரு துறைகளுக்கும் அறிவிக்கப்படுவது வழக்கம். இம்முறை ஏற்கனவே 4 துறைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.  விபரம் பின்வருமாறு,

  • மருத்துவம் – ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ்
  • வேதியியல் – இரு பெண் விஞ்ஞானிகள் ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர்
  • இயற்பியல் – கருந்துளை ஆய்விற்காக ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ்
  • இலக்கியம் – அமெரிக்க கவிஞர் லூயிஸ்

2020 அமைதிக்கான நோபல் பரிசுக்கு 318 நபர்கள், மற்றும் 107 அமைப்புகள் களத்தில் இருந்தனர். ஒரு பரிசுக்கு இத்தனை அதிகமான நபர்கள் கலந்து கொள்வது இது 4வது முறையாகும். தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுநோய் உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரித்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனை எதிர்கொண்டு ”உலக உணவுத் திட்டம்’ அமைப்பு அதன் முயற்சிகள் உலகம் முழுவதும் ஏழை மக்களுக்கு உணவளிக்க பாடுபட்டது. மேலும் உணவுப் பாதுகாப்பை நாடுகளுக்கு இடையே சமாதானக் கருவியாக மாற்றுவதிலும் தனது ஒத்துழைப்பை இந்த அமைப்பு வழங்கி உள்ளது.

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் காசோலை டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும். இது ஸ்வீடிஷ் தொழிலதிபர் ஆல்பிரெட் நோபல் அவர்கள் எழுதி வைத்த உயில் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அக்டோபர் 11ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here