30 நாட்களில் முன் நெற்றியில் முடி வளர சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
hair growth
hair growth

இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு அதிகம் உள்ள பிரச்சனை முடி உதிர்தல் தான். இதனை ஆரம்பத்தில் அசால்ட்டாக விட்டு விட்டால் நாளடைவில் அதிகமாகி இருக்கும் முடிகளையும் இழக்க நேரிடலாம். இப்பொழுது முன் நெற்றியில் முடியை அடர்த்தியாக வளர செய்வது எப்படி என பார்க்கலாம்.

முடி உதிர்வை தடுக்க…

முடி உதிர்வதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால் சொட்டை விழும் அளவிற்கு சென்று விடும். பெண்களுக்கு முன் வழுக்கை கூட ஏற்படலாம். மேலும் சத்துக்கள் குறைபாட்டால் தான் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது முடி உதிர்வை தடுக்க மற்றும் முன் நெற்றியில் முடியை அடர்த்தியாக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

hair oil ingredients
hair oil ingredients

தேங்காய் எண்ணெய்

வெந்தயம்

கருவேப்பிலை

பெரிய வெங்காயம்

கற்றாழை

செம்பருத்தி

கரிசலாங்கண்ணி

செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை இரவில் தலையில் நன்கு தேய்த்து முடியை அலசவும். இப்பொழுது கரிசலாங்கண்ணி இலையை அரைத்து 2 நாட்கள் நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் கற்றாழையை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி, கறிவேப்பிலை, கற்றாழை, வெந்தயம் மற்றும் அரைத்து காய வைத்த கரிசிலாங்கண்ணியை சேர்த்து அடுப்பை சிறிதாக வைத்து கொதிக்க விட வேண்டும்.

Best-Oils-for-Hair-Growth_
Best-Oils-for-Hair-Growth_

15 நிமிடங்கள் கழித்து இறக்கி ஆறவைத்து வடிகட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதனை இரவு தூங்கும்போது தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து காலையில் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி அடர்த்தியாகவும். நீளமாகவும் வளரும். இந்த எண்ணெயை தலையில் தேய்த்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லையெனில் கைகளில் முடி வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here