திமுகவுடன் தேமுதிக கூட்டணி?? – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!

0

தேமுதிக கட்சியில் தற்போது அரசியல் நிலை எந்த இடத்தில் உள்ளது என்று அந்த கட்சினருகே தெரிய அளவிற்கு உள்ளது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டிடுமா? அல்லது திமுக கட்சியுடன் இணைத்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்த தேர்தல் மிகவும் கவனம் பெற்றதாக பார்க்கப்படுவதற்கான காரணம் சொல்லும்படியாக எந்த முக்கிய தலைவர்களும் இந்த தேர்தலில் இல்லை.

சரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா – குடும்பத்திற்கு ஏற்படப்போகும் விளைவு என்ன??

அதே போல் இந்த தேர்தலில் நடிகர்களும் போட்டியிடுகின்றனர். இப்படியாக அரசியல் களம் இருக்க கடந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்து முக்கிய கட்சியாக பார்க்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் பல வித பூசல்களில் ஈடுபட்டது. இதனால் இந்த இரு கட்சிகளும் பிரிவினை சந்தித்தது. தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அதிமுகாவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக தெரிவித்து விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அந்த கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியுடன் போட்டியிடுமா? என்று கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. தேமுதிக கட்சி சார்பில் அந்த கட்சியிடம் 50 சீட் மற்றும் இணையான நிதி ஆகியவற்றை கேட்டுள்ளனர். இதனால் அமமுக கட்சி இவர்களுடன் கூட்டணி அமைப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளது. தற்போது வேறு வழியே இல்லாமல் தேமுதிக கட்சி திமுக கட்சியினை நாடியுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு இன்னும் சிறிது நாட்களில் மீண்டும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here