சூர்யா படத்தில் வில்லனாகும் பிளாப் நடிகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
surya

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 40ஆவது திரைப்படத்தில் வில்லனாக தமிழ் படங்களின் பிரபல கதாநாயகன் ஒருவர் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது துவங்கியுள்ளது.

வில்லனாக நடிக்கும் நடிகர்

நடிகர் சூர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘சூரரைப்போற்று’. மக்களிடையே இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் ஆஸ்கார் திரைப்பட விருதுக்கு தகுதியான படமாகவும் சூரரைப்போற்று தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த உற்சாகத்தில் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. குடும்பப்பாங்கான திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பிரபலம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்!!

இவர் முன்னதாக இயக்கியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன், நடிகர் சத்யராஜ், நடிகை பிரியங்கா அருள் மோகன், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்துள்ள நடிகர் வினய், மீண்டுமாக நடிகர் சூர்யாவுடன் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை முடிந்த நிலையில், படப்பிடிப்பு துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here