தேமுதிக – அமமுக கட்சியுடன் கூட்டணியா? – சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!

0

தமிழக அரசியல் சூழலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் தான் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனை அடுத்து தேமுதிக அமமுக கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2021

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்தும், தேர்தல் அறிக்கை குறித்தும் விவாதித்து அதனை வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பல வித எதிர்பார்ப்புகளுடன் தான் தேர்தல் நடைபெற இருக்கின்றது. காரணம், இந்த முறை எந்த கட்சியிலும் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு தலைவர்கள் இல்லை. அது மட்டும் இன்றி பல கட்சிகளில் கோஷ்டி பூசல் நிலவி வருகின்றது.

#INDvsENG டி20 தொடர் – ‘யோயோ’ சோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வி!!

நேற்று அதிர்ச்சிகமாக அதிமுக கட்சியின் கூட்டணியில் இருந்து தேமுதிக கட்சி விலகுவதாக தெரிவித்தது. இதனை அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தேர்தல் காலம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. கூடுதலாக, தேமுதிக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியுடன் போட்டியிடுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான சுழலில் தேமுதிக கட்சி சார்பில் அமமுக கட்சியுடன் கூட்டணியில் ஈடுபடுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், மாணிக்க ராஜாவுடன் தேமுதிகவின் பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here