மஹாசிவராத்திரியை ஒட்டி கங்கையில் புனித நீராடல் – ஹரித்துவாரில் குவியும் பக்தர்கள்!!

0

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவினை ஒட்டி மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்காக புனித நீராட கங்கையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மஹாகும்பமேளா 2021

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரத்தில் பக்தர்கள் கங்கை நதி கரையில் புனித நீராட வருவர். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மஹாசிவராத்திரி வருவதை அடுத்து மக்கள் புனித நீராட வந்த வண்ணமாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த விழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

#INDvsENG டி20 தொடர் – ‘யோயோ’ சோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வி!!

மஹாசிவராத்திரி விழாவினை அடுத்து ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆம் தேதி பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீராடல் நிகழ்வில் மக்கள் மட்டுமன்றி சாதுக்கள் மற்றும் ரிஷிகள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது கொரோனா காலம் என்பதாலும், மக்கள் அதிகளவில் கூட இருப்பதாலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கும்பமேளா நிகழ்வில் சாதுக்கள் என்று கூறப்படும் நிர்வாண சாமியார்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிவபெருமானின் நாமங்களை ஜெபித்து கொண்டே செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆண்டு நடைபெற இருக்கும் விழா குறித்து கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் கூறியதாவது, “கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் கும்பமேளா திருவிழா முதலில் ஹரிதுவராவில் இருந்து துவங்க இருக்கிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here