#INDvsENG டி20 தொடர் – ‘யோயோ’ சோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வி!!

0

பெங்களுருவில் நடத்த உடற்தகுதி யோயோ தேர்வில் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கமாட்டார் என்று தெரிகிறது.

இந்தியா vs இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் வருகிற வெள்ளிக்கிழமை முதல் தங்களது டி 20 தொடர்களை விளையாட உள்ளனர். இந்த தொடர் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போது இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல் தெரிகிறது. காரணம் காயம் காரணமாக நடராஜன் தற்போது பெங்களூரு கிரிக்கெட் பயிற்சி அகடெமியில் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே இவர் டி 20 தொடரில் ஒரு சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. மேலும் வருண் சக்கரவர்த்தியும் ஏற்கனவே நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்வாகவில்லை. இந்நிலையில் அவர் இன்று பெங்களூரு பயிற்சி அகாடெமியில் உடற்பயிற்சி மேற்கொண்டு உடற்தகுதி தேர்வுக்கு சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை வெளியீடு!!

இன்று நடந்த தேர்வில் வருண் சக்கரவர்த்தி யோயோ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் இடம் பிடிக்கமாட்டார் என்று தெரிகிறது. தற்போது இவருக்கு பதில் ராகுல் சஹார் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here