தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை வெளியீடு!!

0

சட்டசபை தேர்தலுக்கான திமுக கட்சியின் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி பங்கீடு

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக கட்சியுடன் சில கட்சிகள் கூட்டணியில் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகில் மூன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்’ – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!

அந்த வகையில் திமுக – 174, காங்கிரஸ் கட்சி – 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 6, மதிமுக கட்சி – 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி – 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் -3, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி -3, மனித நேய மக்கள் கட்சி -2, தமிழக வாழ்வுரிமை கட்சி -1, மக்கள் விடுதலை கட்சி -1, ஆதித் தமிழர் பேரவை -1 என்ற அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் பெயர் விவரத்தை இன்று மாலை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here