மகா சிவராத்திரி விரதம் – பூஜை முறை மற்றும் பலன்கள் இதோ!!

0

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த ஆண்டு மஹாசிவராத்திரி வியாழக்கிழமை வர இருப்பதால் கூடுதல் சிறப்பு. இதனை அடுத்து இந்த நாளிற்கான சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

மஹாசிவராத்திரி விரத நாள்

ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி மாசி மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எல்லா வல்ல இறைவனான சிவா பெருமானை இந்த நாளில் விரதம் இருந்து வணங்கினால் நாம் நினைத்தது அத்தனையும் நடக்கும் என்பது ஐதீகம். மஹாசிவராத்திரி நாள் அன்று ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து விரதம் இருந்து சிவ நாமங்களை ஜெபித்தால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பல ஜென்ம பாவங்கள் விலகும் என்பது நமது முன்னோரின் நம்பிக்கை ஆகும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

அதுவும் இந்த நாள் இந்த ஆண்டு வியாழக்கிழமையான நாளை வர இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு சிவராத்திரி கூடுதல் சிறப்பினை பெறுகின்றது. இந்த நாளில் இரவு முழுவது கண்விழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவ பெருமானுக்கு செய்யும் அபிஷேக ஆராதனைகளை கண் குளிர கண்டு சிவ பெருமானின் நாமங்களை ஜெபிக்க வேண்டும். ஆலயங்களில் நாளை 4 கால பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Mahashivratri 2019 : Date And Timing Of Shivratri, Know Puja Vidhi - महाशिवरात्रि 2019 : इस समय कर लें पूजा, शिव जी पूरी करेंगे सारी मुरादें | Patrika News

இந்த நாளில் இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். இரவு நேரத்தில் நடைபெறும் பூஜைகளை ஆராதித்தால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டால் கர்ம வினைகள் அகலும். ஏழைகளுக்கு உதவினால் இனி வரும் பிறவிகளில் ஏற்பட இருக்கும் பாவங்கள் விலகும். எதுவும் வாங்கி தர இயலவில்லை என்றாலும், சிறிதளவு வில்வம் தானம் செய்தால் பல பிறவிகளுக்கு புண்ணியம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here