‘உலகில் மூன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்’ – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!

0

உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியான முறையில் அவதிப்பட்டு வருகிறார் என்று உலக சுகாதார மையம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண்கள்:

கடந்த ஆண்டு கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது இதுகுறித்து உலக சுகாதார மையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இல்லாத அளவிற்கு கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஆசிய, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் அதிக அளவில் தனது இணையால் வன்முறைக்குளாகியுள்ளனர். மேலும் சில நாடுகளில் பெண்களில் பாதி பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது வருத்தமான உண்மை. உலக அளவில் 85 கோடி 20 லட்ச பெண்கள் தங்கள் 15 வயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

யானைக்கு தீ வைத்த வழக்கு – கைதிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!!

மேலும் உலகளவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்துள்ளது என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் மூலம் அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் 20 வயது அடையும் முன்பே பெண்கள் தங்களுக்கு நெருக்கமான உறவுகளுடன் பாலியல் வன்முறையை நேரிடுகிறது என்று WHO அதிர்ச்சியாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here