தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் 15 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து தேர்தல்களம் காண உள்ளது. முன்னதாக அதிமுக கட்சியில் துணை பொறுப்பாளராக இருந்த டிடிவி தினகரன் முதல்வர் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுக கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியுடன் இணையாத அமமுக கட்சி தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் ராசிபுரம் பகுதியில் அன்பழகன், பாபநாசம் தொகுதியில் பெ.ரெங்கசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன், சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன், சோளிங்கர் தொகுதியில் என்.ஜி.பார்த்திபன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தொடர்ந்து வீரபாண்டி தொகுதியில் எஸ்.கே.செல்வம், அரூர் தொகுதியில் ஆர்.ஆர்.முருகன், பொள்ளாச்சி தொகுதியில் கே.சுகுமார், புவனகிரி தொகுதியில் கே.எஸ்.கே.பாலமுருகன், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆர்.மனோகரன், மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலு, திருப்பத்தூர் தொகுதியில் கே.கே.உமாதேவன், உசிலம்பட்டி தொகுதியில் ஐ.மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் துரைசாமி (எ) சாலஞ்சர் துரை, தருமபுரி தொகுதியில் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here