ஹாரி-மேகன் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் – எலிசபெத் அறிக்கை!!

0

இங்கிலாந்து இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். தற்போது இதுகுறித்து இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிக்கை விட்டுள்ளார்.

இங்கிலாந்து:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகனும் கடந்த 2018ம் ஆண்டு அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்கு இணங்க திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அரச குடும்பத்தில் இவர்கள் இருவரும் பல பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகி கலிபோர்னியா மாகாணத்திற்கு வந்து வசித்து வந்தனர். ஆனால் ஹாரி-மேகன் அரச குடும்பத்தில் இருந்து விலக்கியதற்கு இதுதான் காரணம் என்று பத்திரிகையாளர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதுகுறித்து ஹாரி-மேகன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்க பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே ஓர் நேர்காணல் நிகழ்ச்சியில் ஹாரி-மேகன் ஆகிய இருவரிடமும் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் தங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், சாவல்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்ட பல விஷயங்களை மனம் திறந்து பேசினர். மேலும் அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் வந்துள்ளதாம் என்று அதிர்ச்சியான தகவலையும் கூறியுள்ளார்.

உத்திரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா – பின்னணியில் பாஜக உள்ளதா??

மேலும் தனக்கு இரண்டாவது மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்றும் அரச குடும்பத்தினர் கவலையப்படுவதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கலப்பின பெண்ணான தனக்கு மகன் பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் கூறியதாவது, கடந்த சில ஹாரி-பேகன் எவ்வளவு சவாலாக வாழ்ந்து வருகின்றனர். இதனை குறித்து முழு குடும்பமும் வருத்தப்பட்டு வருகின்றோம். இவர்கள் எழுபட்ட பிரச்சனைகள் அனைத்தும், குறிப்பாக இனம் தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here