உத்திரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா – பின்னணியில் பாஜக உள்ளதா??

0

உத்திரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்துள்ளார். இவர் மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

உத்திரகண்ட்:

உத்திரகண்ட் மாநிலத்தில் பாஜக தலமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக திரிவேந்திர சிங் ராவத் ஆட்சி செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே இவரது ஆட்சி மீது பாஜக மூத்த தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மாநில முதல்வருக்கு இடையே பல பிரச்சனைகள் நிலவி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் திரிவேந்திர சிங் ராவத் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார். தற்போது இதன் காரணமாக உத்திரகண்ட் அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெரும் கருணாஸ்!!

அதுமட்டுமல்லாமல் உத்திரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது பதவி விலகலில் பாஜக பின்னணி உள்ளதா என்று பலரும் வினவி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here