Friday, April 26, 2024

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தமிழகத்துக்கு வரலாம் – நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!!

Must Read

தமிழகத்துக்கு வர நினைக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், கொரோனா தொற்று நெகடிவ் என்ற சான்று பெற்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாட்டு மக்களிடையே பல பிரச்னைகளளை உண்டாக்கியுள்ளது. இதனால் பலரும் பல விதங்ககில் அவதிப்பட்டு வருகின்றனர். அதில், முக்கியமானவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். பொது முடக்கம் அமல் ஆனதும் அனைவரையும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பலர், நடந்து தான் சென்றனர். இதனை கண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வந்தது.

ரயில்வே துறை அவர்கள் சார்பில், சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்தது. தமிழக அரசு 200 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை அமைத்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழிவகை செய்தது.

புதிய சிக்கல்:

இதற்கிடையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் தங்கள் கையில் வைத்து இருந்த பணத்தை செலவு செய்து விட்டதால், பணம் இல்லாமல் தவித்து வந்தனர். அதனால், தமிழகத்தில் வந்து வேலைகளை பார்க்க விரும்பினார். அவர்களுக்கு சாதகமாய், தமிழக அரசு சில தளர்வுகளை செய்துள்ளது. அதில், வேற மாநிலங்களுக்கு சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வர வேண்டும் என்றால், பிசிஆர் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு நெகடிவ் என்று வந்தால், தமிழகத்திற்கு வரலாம் என்று தொழில்துறை நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது, தமிழக அரசு.

migrants on the way to thier house
migrants on the way to thier house

இந்த பரிசோதனைக்கு தொழிலாளர்களின் நிறுவனங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அந்த நிறுவனங்கள் தான் சிகிச்சைக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.., தமிழகத்தில் மே மாதம் மழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இப்போது அனைத்து பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மழை பெய்யுமா என மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -