Friday, April 26, 2024

நம்ம நாட்டுக்கு என்னதான் ஆச்சு!!! பாதிப்பு- 15 லட்சம்!! உயிர்ப்பலி – 33 ஆயிரம்!!

Must Read

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!! 33 ஆயிரத்தை தாண்டியது உயிர்ப்பலி!!

இந்தியாவில் கொரோனா

தினம் தினம் கட்டுக்குள் அடங்காமல் பரவி வரும் கொரோனாவினால் 9,52,743 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 33,425 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,703 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14,83,156 ஆக உயர்ந்துள்ளது.

இது தெரியுமா உங்களுக்கு⇒⇒புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தமிழகத்துக்கு வரலாம் – நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!!

மேலும் 654 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை பாதிப்படைந்த 9,52,743 பேர் குணமடைந்துள்ளனர். 33,425 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தொற்று நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கருத்து

சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் மும்பை, நொய்டா, மற்றும் கொல்கத்தாவில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்களை திறந்து வைத்தார். அப்போது மேற்குறிப்பிட்ட கருத்தினை தெரிவித்திருந்தார்.

கொரோனா இறப்பு குறைவு

மேலும், “கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மற்ற பெரிய நாடுகளை விட மிகக் குறைவு என்றும், குணமடைந்து வருவோர் விகிதம் பெரும்பாலான நாடுகளை விட அதிகம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -