அமெரிக்காவில் தலைதூக்கிய வேலையின்மை பிரச்சனை – 3 கோடியை தொட்ட அவலம்..!

0
enewz.in unemployment in america
enewz.in unemployment in america

சீனாவில் இருந்து பரவிய கொரோனா நாடெங்கிலும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து போய் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உயிர் பலி மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வீழ்ச்சி அடைய செய்துள்ளது.

சிங்கப்பூரில் குறைந்த கொரோனா பாதிப்பு – சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அமெரிக்காவில் இது வரை 1.10 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும் அமெரிக்கா இது வரை பார்த்திடாத அளவிலான வேலையின்மை பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

enewz.in unemployment in america
enewz.in unemployment in america

அமெரிக்க அரசு வெளியிட்ட செய்தியில் கடந்த மே மாத நிலவரப்படி வேலையின்மை விகிதம் 20 ஆஹ் உயர்ந்துள்ளது. ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாகப் பொருளாதார வல்லுநர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 14.7 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 19.8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

வேலையின்மை

வேளாண்மை அல்லாத இதர துறைகளில் மே மாதத்தில் மொத்தம் 80 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதற்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில் வேலையை இழந்தோரின் எண்ணிக்கை 2.05 கோடியாக இருந்தது. மார்ச் மாதத்திலிருந்து இதுவரையில் மொத்தம் 2.94 கோடிப் பேர் கொரோனாவால் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதர் – பிரதமர் மோடி பாராட்டு

enewz.in unemployment in america
enewz.in unemployment in america

2007-09 நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினையை விட இது மூன்று மடங்கு அதிக பாதிப்பாகும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அப்போது வேலைகளில் இயல்பு நிலை திரும்பவே ஆறு ஆண்டுகள் ஆயின. தற்போது கொரோனா பாதிப்புகள் சரியாக அதை விட அதிகக் காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த வேலையின்மை பிரச்சனை தற்காலிகமானது தான் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here