ஊரடங்கில் இன்ஸ்டாகிராம் மூலம் ரூ. 3.62 கோடி சம்பாதித்த கோஹ்லி – முதலிடம் யார் தெரியுமா..?

0
virat kholi
virat kholi

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பொருளாதார அளவில் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது அதுமட்டுமில்லாமல் பலரும் வேலையில்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர்கள், இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் இன்ஸ்டகிராமில் ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் ஒர்க் – 1 கோடி சம்பளம் பெற்ற பலே டீச்சர்..!

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள்

கொரோன ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலர் தங்களது பொருத்தினை போக்க சமூக வலைத்தளங்களில் நேரலையில் வந்து மக்களை சந்தித்தனர்.மற்றும் சிலர் தங்களது விடீயோக்களை பதிவிட்டனர்.கடந்த மார்ச் 12 முதல் மே 14 வரை இன்ஸ்டகிராம் மூலமாக அதிக பணம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த இக்காலக்கட்டத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 17.19 கோடி சம்பாதித்து விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

 கோலி 6 வது இடம்

இந்த பட்டியலில் நமது இந்தியா கிரிக்கெட் விராட் கோலி 6 வது இடத்தில் உள்ளார்.இன்ஸ்டகிராம் தளத்தில் நிறுவனங்கள் பற்றிய விளம்பரப் பதிவுகளின் மூலம் ரூ. 3.62 கோடி வருவாய் பெற்ற முதல் 10 வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் கோலி மட்டுமே. ஊரடங்கு காலக்கட்டத்தில் இன்ஸ்டகிராமில் 3 விளம்பரப் பதிவுகள் மட்டுமே வெளியிட்டுள்ளார் . அந்த ஒவ்வொரு விளம்பரப் பதிவுக்கும் அவருக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.21 கோடி கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here