ஆம் ஆத்மி பெண் எம்.பி.ஸ்வாதி மலிவால் தாக்குதல் விவகாரம்., புதிய வீடியோ வெளியீடு? அதிர்ச்சி தகவல்!!!

0
ஆம் ஆத்மி பெண் எம்.பி.ஸ்வாதி மலிவால் தாக்குதல் விவகாரம்., புதிய வீடியோ வெளியீடு? அதிர்ச்சி தகவல்!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கெஜ்ரிவாலின் வீட்டில் தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தான் தாக்கப்பட்டதாக, ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.பி.ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து இது தொடர்பாக நேற்று முன்தினம் (மே 16) டெல்லி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரும் அளித்துள்ளார்.

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

மேலும் தனது வயிற்றில் பிபவ் குமார் காலால் உதைத்ததாக சோசியல் மீடியாவில் செய்தியை மலிவால் பகிர்ந்ததுடன் கெஜ்ரிவாலின் புகைப்படத்தையும் வலைதளத்தில் இருந்து நீக்கி உள்ளார். இந்நிலையில் தற்போது விவகாரம் நடந்ததாக கூறப்படும் அன்றைய தினம், கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் டெல்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here