ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் ஒர்க் – 1 கோடி சம்பளம் பெற்ற பலே டீச்சர்..!

0

த்தரப்பிரதேசத்த மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 25 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை

உத்தரப்பிரதேசத்தில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) என்னும் பெயரில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அனைத்து மாவட்டத்திலும் இருக்கின்ற மண்டலங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பள்ளிகள் நடத்தி வருகின்றன. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் முழு நேரமாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.30000 சம்பளமாக வழங்கப்படுகிறது.இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் சொந்த விவரங்கள் அடங்கிய டிஜிடல் டேடா பேஸ் ஒன்று அமைக்கப்பட்டது. 

பூமியை நெருங்கும் 5 ராட்சச விண்கற்கள் – நாசா எச்சரிக்கை

அதைப் பரிசீலித்த போது மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் அனாமிகா சுக்லா என்னும் பெயருடைய ஆசிரியை சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரே சொந்த விவரங்களுடன் பணி புரிவது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரன் ஆனந்த்,

இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியையின் பெயர் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், விசாரணைக்காக ஆஜராகும்படி அனாமிகா சுக்லாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அவர் ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  மேலும்  அவர் தற்போது எங்குள்ளார் என்பதும் கண்டுபிடிக்க முடியவில்லைதற்போது அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரன் ஆனந்த், “ஆன்லைன் மற்றும் விரல் அடையாளம் மூலம் வருகைப்பதிவு நடைபெறும் வேளையில் ஒரு ஆசிரியை எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் வருகைப் பதிவு செய்தார் என்பது வியப்பாக உள்ளது.இதுபற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.  எனவே இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தகவல்களின் அடிப்படையில் அவர் ஒருவருக்கு மாதம் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை. இதுவரை இந்த தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் முறைகேடு நடந்தது உண்மை என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படும். இதுபோல வேறு சில ஆசிரியர்களும் முறைகேடாக வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறார்களா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here