இன்று நள்ளிரவு ‘பெனம்ரா சந்திர கிரகணம்’ – எங்கிருந்து பார்க்கலாம் தெரியுமா..?

0
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆன பெனம்ரா சந்திர கிரகணம் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை தெரிய உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது சூரியன்,நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் தெரியப்போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம்:

சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமி சூரிய ஓளியினை நிலவின் மீது படாமல் மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் ரெண்டாவது சந்திர கிரகணம் ஆன பெனம்ரா சந்திர கிரகணம் இன்று (இந்தியா நேரப்படி) இன்று இரவு 11:15 மணி முதல் நாளை அதிகாலை 2:34 மணி வரை தெரிய உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பூமியை நெருங்கும் 5 ராட்சச விண்கற்கள் – நாசா எச்சரிக்கை

இந்த சந்திர கிரகணம் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை நீடிக்கும். தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த கிரகணம் ஆசியா,ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் நன்றாக பார்க்க வாய்ப்பு உள்ளது.

பெனம்ரா சந்திர கிரகணம்:

இந்த பெனம்ரா கிரகணத்தின் சிறப்பம்சம், பூமியின் புறநிழல் மட்டுமே நிலவின் மீது விழும். இது மற்ற கிரகணங்களை விட வேறுபட்டது ஆகும். பூமியின் புறநிழலை குறிப்பதால் இதனை பெனம்ரா என்று குறிப்பிடுகின்றனர். இந்த கிரகத்தின் போது நிலவு அடர்ந்த சிவப்பு வண்ணத்தில்(ஸ்ட்ராபெர்ரி) தெரியும். கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதியும் இதே போன்ற சந்திர கிரகணம் தெரிந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here