பூமியை நெருங்கும் 5 ராட்சச விண்கற்கள் – நாசா எச்சரிக்கை

0
NASA
NASA

சூரிய மண்டலத்தில் தற்போது பூமிக்கு அருகில் ராட்சத விண்கற்கள் 5 விண்கற்கள் கடந்து செல்கிறது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன.இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் கடந்து செல்லும்

பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் கற்கள் தான் விண்கற்கள்.சிறு கற்களும், உலோகப் பாறைகளும் சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த 5 விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதர் – பிரதமர் மோடி பாராட்டு

அச்சமயம், விண்கல் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விளையாட்டு மைதானம் வடிவில் உள்ள ராட்சத விண்கற்கள்

விளையாட்டு மைதானம் போன்ற வடிவில் உள்ள இந்த ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.இதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என்.5 என்ற பெயரிட்ட விண்கல் 62 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற ராட்சத விண்கல் சுமார் 50.9 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here