அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம் – பாடங்கள் குறைப்பு..!

0
Anna University
Anna University

கொரோனா பாதிப்பு காரணமாக பாடங்கள் நடத்த முடியாத காரணத்தால் வினாத்தாள் வடிவமைப்பில் அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வினாத்தாள் வடிவமைப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் இறுதித் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முடியும் வரை கல்லூரிகளை திறப்பது மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படாது என அரசு தெரிவித்து இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகள் வெளியீடு..!

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சில பாடங்கள் நடத்தி முடிக்கப்படாத காரணத்தால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் 5 யூனிட்கள் உள்ள தேர்வில் 4 யூனிட்களில் இருந்து கேள்விகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதியில் 2 மதிப்பெண் கொண்ட 10 வினாக்கள், தற்போது 3 மதிப்பெண் கொண்ட வினாக்களாக குறைக்கப்பட்டு உள்ளது. 2வது பகுதியில் 16 மதிப்பெண் கொண்ட 5 வினாக்கள் தற்போது 19 மதிப்பெண்கள் கொண்ட 4 வினாக்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here