மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதர் – பிரதமர் மோடி பாராட்டு

0
madurai saloon shop mohan nethra
madurai saloon shop mohan nethra

துரை மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கபட்டவர்களுக்காக தனது மகளின் படிப்பு செலவுக்காக வைதித்ருந்த 5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கிய சலூன் கடைக்காரர்.அவரது நல்ல எண்ணத்தை பாராட்டி அவரது மகளை நல்லெண்ண தூதராக ஐ.நா தேர்வுசெய்துள்ளது.

அரசாங்கம் குருட்டுத் தனமாக முடிவுகளை எடுக்கிறது – கார்த்திக் சிதம்பரம்

மதுரை சலூன்கடைக்காரர் மகள் நல்லெண்ண தூதர்

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.அதேபோல் மேலமடையில் வசித்து வருபவர் மோகன்.இவர்க்கு வயது 47 இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேத்ரா என்று ஒரு மகள் இருக்கிறார் அவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் மேற்படிப்பிற்காக மோகன் ரூ. 5 லட்சம் சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் அப்பகுதி மக்களுக்கு தன் மகளின் படிப்புச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இது பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.  தன் மகள் நேத்ரா இல்லாதவர்களுக்கு நிவாரணம் போன்றவற்றை வழங்க வேண்டும் இல்லையெனில் சாப்பிடமாட்டேன் இருக்கமாட்டேன் என்று வற்புறுத்தியதால் நிவாரண உதவியை வழங்கியதாக மோகன் அப்போது தெரிவித்தார்.ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார்.

.நா பாராட்டு

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.இக்குடும்பத்தினரின் சேவையை பாராட்டியுள்ள ஐ.நா, நேத்ராவை வளர்ச்சி மற்றும் அமைதி அமைப்பின் ( United Nations Association for Development And Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக (GOODWILL AMBASSADOR FOR THE POOR) நேத்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.அவருடைய எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர் மேலும் ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐ.நா வறுமை ஒழிப்பு மாநாட்டில் இவர் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது,இந்நிலையில் தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here