அரசாங்கம் குருட்டுத் தனமாக முடிவுகளை எடுக்கிறது – கார்த்திக் சிதம்பரம்

0

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை.பதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது.மத்திய அரசு ஒழுங்கான சரியான நடவடிக்கையம் உரிய நிவாரணமும் சரியாக வழங்கவில்லை என ப.மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கார்த்தி சிதம்பரம் மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.  கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது உயிர் சேதமும் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது ஆனால் மத்திய அரசு உரிய சலுகைகளை தமிழகத்துக்கு வழங்க வில்லை இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பளம் தராத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா..? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருகிறது.தமிழக மற்றும் மத்திய அரசுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எந்த சக்தியும் இல்லை என்பது தற்போது தெளிவாகத் தெரிகின்றது.கொரோனா பாதிப்பு  தொடர்பாக தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்று கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழக மற்றும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ஊரடங்கு அறிவிக்கும் போது மக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என தெரியும். அப்படி இருக்கையில் ஊரடங்குக்கு முன்பே அனைவருக்கும் நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஊரடங்கின் போதாவது நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும் அப்படி கொடுக்கமல் ஊரடங்கை அறிவித்ததனால் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் கூலி செய்பவர்கள் எவ்வாறு குடும்பத்தை நடத்துவார்கள்.சிறு, குறு விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லாம் முன்பே நிவாரணம் வழங்கி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு.அரசு ஊரடங்கை அறவிக்க போகிறது உங்கள் வங்கிக் கணக்கில் நிவாரண பணம் போடுகிறோம் என்றாவது கூறியிருக்க வேண்டும்.

இதுமாதிரி மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை. ஆனால் அதை எல்லாம் செய்ய வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம். அதையும் தாண்டி இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்று கூட தெரியவில்லை. அவர்களை எல்லாம் நாங்கள் ஊரடங்கு விதிக்கப் போகிறோம். ஒரு நான்கு நாட்களில் உங்கள் ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. அதை எல்லாம் செய்யாமல் 4 மணி நேரத்தில் ஊரடங்கை அறிவித்தால் அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். இந்த அரசாங்கம் எந்த ஒரு முடிவையும் குருட்டுத் தனமாக எடுக்கின்றது. இவ்வாறு செயல்படுவதே இந்த நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதற்கு காரணமாக இருக்கின்றது” என்றார்.

வகுப்பு பொதுத் தேர்வு தேவையா

இந்தமாதிரியான இக்கட்டான சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பிரச்சினையை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரியாத, திறமையில்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன செய்தியாளர்களிடம் கூறினார்.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here