இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி பாட பட்டியலில் வேதியியல் நீக்கப்படுகிறதா.? – ஏஐசிடிஇ விளக்கம்..!

0
enewz.in இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி பாட பட்டியலில் வேதியியல் நீக்கப்படுகிறதா.? - ஏஐசிடிஇ விளக்கம்..!
enewz.in இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி பாட பட்டியலில் வேதியியல் நீக்கப்படுகிறதா.? - ஏஐசிடிஇ விளக்கம்..!

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தகுதி பாட திட்டங்களில் வேதியியல் பாடம் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது குறித்து ஏஐசிடிஇ விளக்கம் அளித்துள்ளது.

வைகோ

enewz.in vaiko latest news
enewz.in vaiko latest news

மதிமுக கட்சி பொது செயலாளரான வைகோ இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பாடங்களில் வேதியியல் நீக்கப்பட்டதா என்ற செய்திகளை குறித்து மாநிலங்களவையில் பேசுனார். இது குறித்து வைகோவிற்கு ஏஐசிடிஇ விளக்கம் அளித்துள்ளது.

ஏஐசிடிஇ

இது குறித்து வைகோ அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு இயக்குநருக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஏஐசிடிஇ உதவி இயக்குநர், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, “பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான தகுதிப்பாடுகளில், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

சம்பளம் தராத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா..? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

2001ம் ஆண்டு முதல், இத்தகைய படிப்புகளுக்கான தகுதிப் பாடங்களில், இயற்பியலும், கணிதமும் கட்டாயப் பாடங்கள் ஆகவும், அவற்றுடன் கூடுதலாக, வேதியியல், உயிரி தொழில்நுட்பம் , உயிரியியல், தொழில்நுட்பப் பாடங்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடமும் படித்தாக வேண்டும் என்பதே அடிப்படைத் தகுதியாக இருக்கின்றது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

enewz.in engineering study materials
enewz.in engineering study materials

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட கூடுதல் பாடங்களுள், புதிய பாடப்பிரிவுகளான கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் நடைமுறைகள், வேளாண்மை, பொறியியல் வரைகலை, வணிகக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வேதியியல் பாடம் நீக்கப்பட்டதாக, வெளியான செய்திகள் தவறானவை” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here