ஜூன் 11 முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி – திருப்பதி நிர்வாகம் அறிவிப்பு..!

0
Tirupathi Temple
Tirupathi Temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜூன் 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கோவில்கள் திறப்பு:

இந்தியாவில் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இன்று அதற்கான அறிவிப்புகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டார். அதன்படி,

  • திருப்பதி கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
  • ஜூன் 11ம் தேதியில் இருந்து காலை 6.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • பக்தர்களுக்கு கொரோனா இருந்தால் கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • 11ம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு கோவில் அடிவாரத்தில் கவுண்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்படும்.
  • வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
  • 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே முதலாவதாக அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மணிநேரத்திற்கு 500 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
  • உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here