ஒரு வருடத்திற்கு புது திட்டங்கள் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய நிதியமைச்சகம்:

இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைவதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் ஊக்க திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சம்பளம் தராத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா..? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

இதனால் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் இனி ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்திற்கு மட்டும் செலவு அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. எனவே புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு பிற துறைகள் நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கைகள் அனுப்ப வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here