ஓடிடியில் வெளியாகிறதா ‘தலைவி’ – பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்..!

0
Thalaivi
Thalaivi

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்க பட்ட படம் “தலைவி”. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ.55 கோடிக்கு விற்பனை செய்து உள்ளது படக்குழு என்று அப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தலைவி:

மறைந்த முன்னாள் முதல் அமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வந்தது. அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகையான கங்கண ரணாவத் நடித்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இத்திரைப்படத்தை கோலிவுட் இயக்குரான ஏ.ல்.விஜய் இயக்குகிறார். எம்.ஜி.ஆராக பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமியும் கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்றும் மொழிகளில் தயாராகின்றது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

கங்கனா ரணாவத் பேட்டி:

இந்நிலையில் கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறுகையில்”இப்படத்திற்கான தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். மேலும் இப்படம் முதலில் திரை அரங்குகளில் தான் வெளியாகும். திரை அரங்குகளில் வெளியிட்டால் தான் சீராக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here