மாசுபாடுகளை குறைத்த கொரோனா ஊரடங்கு – விஞ்ஞானிகள் நெகிழ்ச்சி..!

0
enewz.in environment pollutions
enewz.in environment pollutions

கொரோனா தோற்று காரணமாக மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் யாவும் இயங்கப்படாத நிலையில் சுற்று சூழல் காற்று மாசடைதல் கணிசமாக குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு

இந்த கொரோனாவால் ஏற்பட்ட இந்த ஊரடங்கு காலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாசடைந்த காற்றுகளையே நாம் சுவாசித்து வந்தோம். அதுவும் சென்னை டெல்லி போன்ற இடங்களில் மாசுக்கள் அதிகம். பணக்காரர்கள் பலரும் சுத்தமான சுவாச காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் பார்லர்களை நாடுகிற நிலை நமது நாட்டிலும் வந்து இருக்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தற்போது இந்த கொரோனா காரணத்தால் இந்த காற்று மாசடைதல் கணிசமாக குறைந்து வருகிறது. இன்று 5- இல் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிற நிலையில், இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் நகர்ப்புறங்களில் காற்றின் தரம், ஒலி மாசுபாடு, தண்ணீர் தரம் உள்ளிட்டவை மேம்பட்டிருக்கிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விஞ்ஞானிகள் கருத்து

இது பற்றி பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் காற்றுமண்டல பெருங்கடல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் எஸ்.கே. சதீஷ் கூறுகையில், “ ஊரடங்கால் இந்தியாவில் காற்றின் தரம், குறிப்பாக நகர்ப்புறங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. மோசம் என்ற நிலையில் இருந்து திருப்தி அல்லது நல்லது என்ற நிலைக்கு காற்றின் தரம் முன்னேறி உள்ளது. இதற்கு காரணம், மனித செயல்பாடுகள் குறைந்து போனதுதான்” என்கிறார்.

உலக சுற்றுச்சூழல் தினம் – நாம் எடுக்கவேண்டிய 5 தீர்மானங்கள்

காந்திநகர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணிஷ் குமார் சிங் இதுபற்றி குறிப்பிடுகையில், “காற்று மாசுவை குறைப்பதற்கு எதிர்காலத்தில் இதுபோன்ற பொதுமுடக்கத்தை பயன்படுத்தலாம். இந்த பொதுமுடக்கத்தால் நமது இயற்கை தாய் இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டிருக்கிறாள். டெல்லியில் குளிர்காலத்தின்போது நாம் கண்டிருக்கிற காற்றுமாசு குறைப்பதற்கு எதிர்காலத்தில் பொது முடக்கத்தை பயன்படுத்தலாம்” என்கிறார்.

ஓசோன் துளையும் இயல்பாகவே சரியாவது போன்ற பார்க்க முடியாத விளைவுகளையும் இந்த பொது முடக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் போஸ் கே வர்கீஸ்.

நம் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதன் அவசியம் – இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இந்த கொரோனா ஒரு பக்கம் நோய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் சுற்றுசூழல் விஷயத்தில் நன்மைகள் தன செய்து வருகிறது. மேலும் மக்களிடையே தன் சுத்தம் பிறர் சுத்தம் பேணுவது போன்ற ஒழுக்கங்களையும் கற்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here