சம்பளம் தராத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா..? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

0

கொரோனாவால் உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.கல்வி நிறுவனங்கள் தொழிற்ச்சாலைகள்,வணிகம் என அனைத்துமே மூடப்பட்டது.கொரோனா ஊரடங்ககின்போது தொழிற்நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு சம்பளத்தையும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு  ஆணை ஒன்று வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

உலக சுற்றுச்சூழல் தினம் – நாம் எடுக்கவேண்டிய 5 தீர்மானங்கள்.

பல நிறுவனங்கள் கொடுத்த வழக்கின் படி வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தது.மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை  திரும்ப பெறப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்து, இது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில் ஊரடங்கை காரணம் சொல்லி தனியார் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் 100 சதவீத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால் இந்த உத்தரவு மார்ச் 25ம்தேதி முதல் மே 17 வரையிலான 54 நாட்களுக்கு மட்டுமே செல்லும்.மே 17க்கு பின் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும், ஊழியர்களுக்கு 100 சதவீத சம்பளம் வழங்காததற்காக முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் அதற்க்கு ஊழியர்களுக்கு 100 சதவீத ஊதியம் வழங்குவதற்கான உத்தரவை மீறியதற்காக முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஜூன் 12 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் சில பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும். உள்துறை அமைச்சக அறிவிப்பின் செல்லுபடி குறித்து 3 நாட்களில் பதிலளிக்குமாறும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here