‘தளபதி 65க்கு பிறகு கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவீர்கள்’ – இயக்குனர் நெல்சன் பேட்டி!!

0

நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

தளபதி 65 சண்டை காட்சிகள்

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ மற்றும் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். புதிய இயக்குனர்களுடன் படம் செய்ய ஆர்வமாக இருக்கும் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் இயக்குனர் நெல்சனுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகிறது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பொதுவாக கமர்சியல் படங்களை பொறுத்தவரை அதிகஅளவு சண்டை காட்சிகள் காணப்படும். அதுவும் நடிகர் விஜய்யின் படம் என்றால் சண்டை காட்சிகள் சற்று அதிகமாகவே காணப்படும்.

புதுச்சேரியில் அமலுக்கு வரும் குடியரசு தலைவர் ஆட்சி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

அந்த வகையில் இந்த படத்திற்கான சண்டை காட்சி இயக்குநராக ‘கேஜிஎப்’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களின் சண்டைக்காட்சி இயக்குநர் அன்பறிவு பணியாற்ற உள்ளார். இயக்குனர் நெல்சன் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ரசிகர்கள் கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்துவிடும் அளவுக்கு தளபதி 65ன் சண்டை காட்சிகள் இருக்கும். ஆக்சன் கலந்த டிராமா கதையாக தளபதி 65 உருவாகவுள்ளது’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here